Categories
இந்திய சினிமா சினிமா

“முக கவசத்துடன் ராதே ஷ்யாம்” வெளியான பிரபாஸ் பட போஸ்டர்… அசாம் போலீஸ் கைவண்ணம்….!!

ராதேஷ்யாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தாங்கள் தற்போது உள்ள நிலையை சுட்டிக்காட்டி அந்த படத்தின் போஸ்ட்டரை போட்டோஷாப் செய்து பதிவிட்ட அசாம் போலீஸ்.

சாஹோ படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் புதிய படத்திற்கு ராதே ஷ்யாம் என தலைப்பு வைக்கப்பட்டு நேற்று அதன் முதல் பார்வை போஸ்டர்  வெளிவந்தது. இந்த போஸ்டரில் பிரபாஸும் படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டேவும் நெருங்கி நின்று முகத்தோடு முகம் வைத்திருப்பது போல உள்ளது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இந்த போஸ்டர் ஏற்கனவே வெளிவந்த ஐ மற்றும் ராம்லீலா ஆகிய  படங்களின் போஸ்டரை அச்சடித்து  உருவாக்கப்பட்டிருப்பதாக ஒரு சர்ச்சை தற்போது கிளம்பியிருக்கிறது. இன்னொரு பக்கம் எதிர்பாராத ஒரு ஆச்சரியமாக அசாம் மாநில போலீசாரிடம் இருந்து விமர்சனம் வந்துள்ளது.

இந்த போஸ்டரை பார்த்து அசாம் போலீசார், “இந்த சமயத்தில் நாயகனும் நாயகியும் முகக்கவசம் இல்லாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒருவரை ஒருவர் நெருக்கமாக அணைத்தவாறு நிற்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய  விஷயமல்ல.. தாங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவரை முக கவசம் அணியுமாறு  அறிவுறுத்த வேண்டும். எனக்கூறி 202௦ல் பர்ஃபெக்ட் ராதேஷ்யாம் என்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்” என தாங்களாகவே போட்டோஷாப்பில் எடிட் செய்து ஒரு போஸ்டரை தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். மேலும் இது பற்றி அவர்கள் கூறுகையில், “பிரபாஸை தொடர்பு கொண்டு இது பற்றி பேசுவதற்கு முயற்சி செய்தோம். ஆனால் எங்களால் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை. அதனால் தான் இந்த செய்தியை போட்டோஷாப் ஆக  எடிட் செய்து அனுப்பியுள்ளோம்” என்று விளக்கமும் அளித்துள்ளார்கள். இந்த போஸ்டரும் பிரபாஸ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

Categories

Tech |