உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் பிரச்சனைதான். உணவுகள் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். அவை என்னென்ன உணவுகள் என்பதை பார்க்கலாம்.
உடலில் ரத்தத்தில் கலக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம், நீரிழிவு, இதய நோய், கிட்னி செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும். ஆனால் மருந்துகள் தவிர்த்து இயற்கையான உணவுகளின் மூலமே உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். ஈரான் மற்றும் மெக்சிக்கோ உள்ளிட்ட நாடுகளில் நீரிழிவுகான பாரம்பரிய உணவாக பூசணிக்காயை பயன்படுத்துகின்றன. பூசணிக்காய் மற்றும் அதன் விதைகள் நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்ஸி டெண்ட் நிறைந்தவையாக உள்ளன. இதனை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவிக்கின்றனர். இது போலவே மீன்,ஈரால் உள்ளிட்ட கடல் உணவுகளில் புரதம், கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் மிகுந்து காணப்படுகின்றன. இவை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது. அடிக்கடி பசி அது அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கவும் இந்த உணவுகள் உதவுகின்றன.
இதுபோலவே பாதாம், வேர்கடலை இவை இரண்டும் உணவுக்குப் பிந்தைய ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுவதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். இது தவிர பீன்ஸ் மற்றும் பயிறு வகைகள் ஊட்டச்சத்து நிறைந்தவை என்றும், இவை நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவும் என்கின்றனர். முட்டையில் ஆரோக்கியமான பல்வேறு வகையான கொழுப்புகள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவற்றின் மூலம் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் முட்டை சிறந்த பங்காற்றுவதாக தெரிவிக்கின்றனர். கரையக்கூடிய நாட்களில் நார்சத்துகளின் ஆதாரமாக விளங்குவது ஓட்ஸ். இதுவும் உடலில் உணவுக்குப் பிந்தைய ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக தெரிவிக்கின்றனர். தினமும் சியா விதையை எடுத்து கொள்வதால் இன்சுலின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் என்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் சியா விதையை அதிகம் எடுத்துக் கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது.