Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபரின் வெறிச்செயல்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்….!!

பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளக்கானூர் காட்டுவளவு பகுதியில் ராஜேந்திரன்- பெரியக்கா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினர் இருவரும் தேங்காய் உறிக்கும் கூலி வேலைக்கு சென்று வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள புதரில் பெரியக்கா முகம் மற்றும் தலையில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரியக்காவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆவடத்தூர் சவுரியூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்பவர் பெரியக்கா தேங்காய் உறிக்கும் குடோனில் சரக்கு வேன் டிரைவராக பணி செய்து வந்துள்ளார்.

இவருக்கும், பெரியக்காவுக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த சுரேசை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் “எனக்கும் பெரியக்காவுக்கும் ஏற்கனவே கள்ள தொடர்பு இருந்ததாகவும், பல முறை நாங்கள் உல்லாசமாக இருந்து வந்தோம். அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெரியக்காவை கையால் அடித்துக் கீழே தள்ளியதில் தலையில் அடிபட்டு அவர் மயங்கி கிடந்தார். அதன்பின் நான் அங்குள்ள கல்லின் மீது பெரியக்காவின் முகத்தை இடித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டேன் என்று சுரேஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்”. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுரேஷிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |