Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

யார் இப்படி செய்தது…? ரத்தமாதிரிகளுடன் வீசப்பட்ட ஊசிகள்…. அதிகாரியின் நடவடிக்கை….!!

ரத்த மாதிரிகளுடன் ஊசிகளை வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டார்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகில் திருக்கண்டீஸ்வரம்-சோத்தக்குடி இணைப்புசாலை இருக்கின்றது. இந்தச் சாலையோரத்தில் ரத்தமாதிரிகளுடன் 200-க்கும் மேற்பட்ட ஊசிகள் குவிந்து கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சுகாதாரதுறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி நன்னிலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜோதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குவிந்து கிடந்த ஊசிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறியபோது இந்த ரத்தமாதிரி ஊசிகள் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயன்படுத்துவது இல்லை. ஆனால் தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் இந்த ஊசிகள் பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த ஊசியை இங்கு வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் குவிந்து கிடந்த ஊசிகள் அப்புறப்படுத்தப்பட்டு சுகாதார சீர்கேடு நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுகாதார மேற்பார்வையாளர் ஜோதி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |