சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் 68 காவல்துறையினர் இரத்ததானம் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் மாவட்ட காவல்துறை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. மேலும் இந்த முகாமானது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காவல்துறையினரை மருத்துவ கல்லூரியின் முதல்வர் வரவேற்றுள்ளார்.
இந்த ரத்ததான நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து ரத்த தானம் செய்வதற்காக 68 காவல்துறையினர் மற்றும் சமூக தன்னார்வலர்கள் முன்வந்தனர். மேலும் இந்த சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு காவல்துறையினரால் 75 யூனிட் ரத்தம் கிடைத்துள்ளது.