Categories
தேசிய செய்திகள்

கல்யாணம் முடிஞ்சவுடனே…. “புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்”… குவியும் பாராட்டுகள்….!!

திருமணம் முடிந்தவுடன் கணவனும்- மனைவியும் சேர்ந்து ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு  பெண் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ள நிலையில் குழந்தைக்கு செலுத்துவதற்கு ரத்தம் தேவைப்பட்டுள்ளது. ஆனால்  அந்த பெண் குழந்தையின் ரத்த வகை உள்ளவர்கள் யாரும்  முன்வந்து ரத்தத்தை கொடுக்கவில்லை.

இந்த தகவலை அறிந்து கொண்ட புது ஜோடி ஒன்று திருமணம் முடிந்ததும் உடனே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். பின்னர் ரத்த தானம் செய்து குழந்தையை காப்பற்றியுள்ளனர் . அதற்கு பிறகு மருத்துவர்கள்  குறித்த நேரத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இந்த நிகழ்வை உத்திரபிரதேசத்திலுள்ள காவலர் தன்னுடைய  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் செய்து ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றிய  புது மண ஜோடிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Categories

Tech |