தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்களுக்கு தேவையான பொருட்களும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்று அதிமுகம் முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி எழுப்பு உள்ளார். இது குறித்து அவர், ஆண்டுதோறும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வேட்டி, சேலை திட்டத்தை எம்ஜிஆர் கொண்டு வந்தார். இந்த திட்டத்தின் மூலம் விசைத்தறி நெசவாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், பெடல் தறி நெசவாளர்கள் பயன்பெற்று வந்தனர். எம்ஜிஆர் கொண்டு வந்த இந்த திட்டத்தினை ஜெயலலிதாவும் அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செம்மைப்படுத்தி வழங்கினார்.
ஆண்டுதோறும் ஒரு கோடி 80 லட்சம் குடும்பங்களுக்கு கொள்முதல் செய்யும் வகையில் ஜூன் மாதம் தொடங்கினால் தான் முழுமையாக பெற முடியும். அதனைத் தொடர்ந்து கைத்தறி துறை, வருவாய் துறை, கூட்டு துறை ஆகிய மூன்று துறைகளை ஒருங்கிணைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது. இது குறித்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட கேள்வி எழுப்பப்பட்டது.இந்த திட்டத்தில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பல்வேறு குளறுபடிகள் வந்துள்ளது. தற்போது ஒரு கோடியே 24 லட்சம் வேட்டிகளும், 99 லட்சம் சேலைகளும் கொள்முதல் செய்வதாக கைத்தறி அமைச்சர் கூறியுள்ளார். இதற்கு போலியான குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டுள்ளன என்ற காரணமாக கூறப்பட்டது. ஆனால் அதிகாரிகள் தரப்பிலும் கடந்த ஆண்டு இருப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். இருப்பு 5,000, 10,000 இருக்கும் லட்ச கணக்கில் எப்படி இருக்கும்?.
அதனை போல வேறுபாடு எப்படி வரும், இருப்பினும் சேலைக்கும் வேட்டிக்கும் வித்தியாசம் வருகிறது. அப்படி என்றால் வேட்டி வழங்குபவர்களுக்கு சேலை வழங்கப்படுமா? சேலை வழங்குபவர்களுக்கு வேட்டி வழங்கப்படுமா? என்ற குளறுபடி உள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டில் பொங்கல் தொகுப்பில் முதல்வர் வழங்கிய போது வீடியோ பதிவில் வேட்டி, சேலை இல்லை. அதனைப் போல எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய பொங்கல் தொகுப்பை எடுத்துக்கொண்டால் அந்த வீடியோ பதில் வேட்டி, சேலை வழங்கிய பதிவு உள்ளது. அதுமட்டுமில்லாமல் கைத்தறி நெசவாளர்களுக்கு உற்பத்தி செய்த நிலுவை தொகை பாக்கியுள்ளது. ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர் இந்த மூன்று மாதத்தில் எப்படி ஒரு கோடி அளவில் உற்பத்தி செய்ய முடியும்