சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாளையங்கோட்டை பெரியபாளையம் பகுதியில் ஒரு கார் வந்தது. இதனையடுத்து அந்த காரை மடக்கி பிடித்த காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் 1 டன் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் கக்கன் நகர் பகுதியில் வசிக்கும் சுரேஷ் மற்றும் பிரதீப் குமார் ஆகிய இருவரையும் பிடித்து நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் நடராஜன் இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 1 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.