Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தமாக சிக்கிய 4 டன்… கண்டுபிடித்த காவல் துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மூதாட்டி உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி காவல்துறையினர் கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து விருவீடு பகுதியில் வசிக்கும் மூதாட்டி உட்பட 2 பேர் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதனைதொடர்ந்து பெரியசாமி மற்றும் பிரபாவதி ஆகிய இருவர் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு அனுப்புவதற்காக பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினர் நடத்திய சோதனையில்  தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து கைது செய்தனர்.  இவ்வாறாக  திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தனிப்படை காவல்துறையினர் ரேஷன் அரிசியை கடத்திய குற்றத்திற்காக 10 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |