Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்த அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையாலுருட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சவுந்தரராஜன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவரது வீட்டில் நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது வீட்டில் 50 கிலோ எடை கொண்ட 23 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினர் தெரிய வந்துள்ளது.

மேலும் அவர் கடையம் பகுதியில் ரேஷன் அரிசியை சேகரித்து கடத்தி வந்து கோழித் தீவனத்திற்கு தயார்படுத்தியதும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சவுந்தரராஜனின் கைது செய்ததோடு அவர் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |