Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி பதுக்கி விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ரேஷன் அரிசி கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி பகுதியில் ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்தவரை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் மொபட்டில் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கூகனூர் பகுதியில் வசிக்கும் விக்னேஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி அங்குள்ள வட மாநிலத் தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் விக்னேஸ்வரன் தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்து அங்கு பதுக்கி வைத்திருந்த 1000 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கைப்பற்றினர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விக்னேஸ்வரனை கைது செய்ததோடு அவர் பதுக்கி வைத்திருந்த 1150 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |