பாலம் உடைக்கப்பட்டதால் ரேஷன் பொருட்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் மூன்று ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த ரேஷன் கடைகளில் 2000க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு தாரர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் கூட்டுறவு வங்கி முன்பு உள்ள கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்வதற்காக பாலம் உடைக்கப்பட்டுள்ளது.
இந்த உடைக்கப்பட்ட பாலம் ஒரு மாதமாகியும் சீரமைக்கப்படாததால் ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கார்டுதாரர்களுக்கு பொருட்களை விநியோகிக்க முடியாத நிலையும் உருவாகியுள்ளது. இந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகமோ பாலத்தை சீரமைக்க வேண்டியது வங்கி நிர்வாகம் என்று கூறுகின்றது. மேலும் வங்கி நிர்வாகமோ பாலத்தை சீரமைக்க வேண்டியது பேரூராட்சி நிர்வாகமே என்று கூறுகின்றது.
இவ்வாறு இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்பட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இது குறித்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படக் கூடிய அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வங்கி முன்பு உள்ள கழிவு நீர் கால்வாய் பாலத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.