Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதைதான் இவ்வளவு நாளா செஞ்சிங்களா…? சோதனையில் வசமாக சிக்கியவர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

2 டன் ரேசன் அரிசியை கடத்த முயன்றவர்களை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்து, ரேசன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விருதுநகர்-சிவகாசி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு வேனை காவல்துறையினர் மடக்கி சோதனை செய்ததில் அந்த வேனில் 40 மூட்டைகளில் 2 டன் ரேசன் அரிசி இருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வேனை விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் வசித்து வரும் சீனிவாசன் என்பவர் ஓட்டி வந்ததும், அவருக்கு உதவியாக தங்கவேல் என்பவர் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இவர்கள் சிவகாசி அமத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசியை சேகரித்து வெளியிடங்களில் விற்பனை செய்து வந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அந்த அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |