Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. மொத்தமாக சிக்கிய 15 டன்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பறக்கும் படை அதிகாரிகள் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் திடீரென சோதனை செய்துள்ளனர்.

அப்போது அங்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் அங்கு பதுக்கி வைத்திருந்த சுமார் 15 டன் எடை உள்ள ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |