வாகன சோதனையின் போது டன் கணக்கில் ரேஷன் அரிசியை வெளிமாநிலத்துக்கு லாரியில் கடத்திய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் கருங்கல் பட்டியில் காவல்துறை ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையின்போது அந்த வழியாக வந்த மினி லாரி மற்றும் சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது சரக்கு வேனில் 140 மூட்டைகளில் 7 டன் ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூருக்கு கடத்தியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஓட்டுனரிடம் போலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த அருள் மற்றும் வெங்கடேசன் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும் இவர்கள் திருப்பத்தூர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்துக்கு கடத்திச் செல்வதும் விசாரணையில் தெரிந்தது. இதனை அடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதோடு அவர்கள் கடத்தி வந்த ரேசன் அரிசி மற்றும் சரக்குவேன், மினி வேன் ஆகியவைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் .