திண்டுக்கல்லுக்கு ரெயில் மூலம் ஆந்திராவிலிருந்து 2,450 டன் ரேஷன் அரிசி கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பருப்பு, அரிசி, கோதுமை ஆகியவை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு இருப்பு வைத்து வழங்கப்படுகிறது. இதற்காக ரயில் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து நேரடியாக மாவட்டங்களுக்கு இந்த பொருள்கள் அனைத்தும் அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 3-ஆம் தேதி ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு 2,450 டன் ரேஷன் புழுங்கல் அரிசி கொண்டுவரப்பட்டுள்ளது.
இதையடுத்து முருகபவனம் நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு லாரிகள் மூலம் அவை அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் ரேஷன் கடைகளுக்கு தேவைக்கு ஏற்ப கொண்டு செல்லப்பட்டு அதன்பின் மக்களுக்கு வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.