Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மினி ஆட்டோவில் இருந்த பெண்கள்… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்… சோதனையில் சிக்கிய பொருள்…!!

ரேஷன் அரிசி கடத்தி சென்ற இரண்டு பெண்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கே.ஜி சாவடி காவல்துறையினருக்கு சட்டவிரோதமாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் வாளையாறு டேம் ரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் கேரளா நோக்கி சென்ற ஒரு மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசியை கடத்தியது தெரிய வந்துள்ளது.

அதன்பின் அந்த ஆட்டோவில் இருந்த இரண்டு பெண்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் போத்தனூர் பகுதியில் வசிக்கும் ஓமனா மற்றும் சரீனா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு அவர்கள் கடத்தி சென்ற 1 டன் ரேஷன் அரிசியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |