Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதுக்காக தான் இப்படி செஞ்சேன்… சோதனையில் சிக்கிய பொருள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கால்நடை தீவனத்திற்காக ரேஷன் அரிசி கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினருக்கு ரேஷன் அரிசியை கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் காங்கேயம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்த போது அதில் 650 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பனியன் நிறுவன தொழிலாளியான மகேஷ் குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இவர் பொதுமக்களிடமிருந்து மொத்த விலைக்கு அரிசியை வாங்கி கால்நடை தீவனத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகேஷ் குமாரை கைது செய்ததோடு, ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |