Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

13 அம்ச கோரிக்கை…. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக ரேஷன் கடை ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக அரசு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மாயவன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் செயலாளரான பெருமாள், இணைச் செயலாளரான ஏழுமலை மற்றும் பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.

இதனை அடுத்து கொரோனா தொற்று காலத்தில் பணி செய்து வருகின்றதனால் பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை பதிவுகளுக்கு மாறாக கண் விழித்திரை மூலமாக விற்பனை செய்யும் முறையை கொண்டுவர வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து கூட்டுறவு துறையின் ரேஷன் கடைகளில் காலியாக இருக்கும் 3500 விற்பனையாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்புமாறு 13 அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |