Categories
பல்சுவை

“பணக்கார அந்தஸ்து வேண்டாம்” சொத்து சேர்ப்பதே சேவை செய்ய தான்….. ரத்தன் டாட்டா…!!

Rattan Tata-வை தெரியாதவர்கள் யாரும் கிடையாது. இவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். இவர் இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் எந்த அளவிற்கு மிகப்பெரிய பணக்காரர் என்பதை நாம் என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா. இதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் முகேஷ் அம்பானியும் ஒருவராவார். இவருடைய net worth கிட்டத்தட்ட 96 பில்லியன் டாலர் ஆகும்.

ஆனால் Rattan Tata-விற்கு அவருடைய டாட்டா இண்டஸ்ட்ரீஸிஷின் வருமானம் மட்டும் 1 வருடத்திற்கு கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் வருகிறதாம். அப்படிஎன்றால் அம்பானியை விட Rattan Tata தான் மிக பெரிய பணக்காரர். மேலும் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் போன்றவர்களை விட இவர்தான் பெரிய பணக்காரர். அப்படி என்றால் இந்தியாவிலேயே நம்பர் 1 பணக்காரர் Rattan Tata-வாக தானே இருக்க வேண்டும் என்று நினைத்தால் அங்குதான் ஒரு சுவாரசியமான தகவல் இருக்கிறது. Rattan Tataவின் பெயரை எந்த ஒரு பணக்காரர் பட்டியலிலும் பார்க்க முடியாது.

இதற்கு  காரணம் அவர் தனக்கு வரும் வருமானத்தை என்றைக்கும் தன்னுடைய பெயரில் வைத்தது கிடையாது. இதனைப்பற்றி Rattan Tataவிடம் ஒரு இன்டர்வியூவில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் கூறியதாவது “நான் இந்த வசதியை உருவாக்கியதற்கு காரணம் என்னுடைய மக்களுக்கு திரும்ப செலுத்துவதற்காக தான். நான் பணக்காரராக காண்பித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்ததில்லை” என்று கூறியிருக்கிறார். மேலும் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டின் விலை 2 பில்லியன் டாலர் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் Rattan Tataவின் மொத்த சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலரைத் தாண்டியதில்லை என கூறப்படுகிறது.

Categories

Tech |