வருகின்ற 25 ஆம் தேதி நடைபெறவிருந்த சார்க் கூட்டம் தொடர்பாக பாகிஸ்தான் தெரிவித்த விருப்பத்தையடுத்து அதில் பங்கேற்கவிருந்த நாடுகள் அதனை ரத்து செய்துள்ளது.
இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் ஒன்றாக சேர்ந்த சார்க் என்னும் அமைப்பின் கூட்டம் வருகின்ற 25 ஆம் தேதி நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்துள்ளது.
இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு செய்யும் ஆட்சியை உலகளவில் எவரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் தலிபான்களும் வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள சார்க் என்னும் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று பாகிஸ்தான் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளது.
இவ்வாறு பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்ததையடுத்து சார்க் கூட்டத்தில் பங்கேற்க விருந்த 8 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளும் இதனை ரத்து செய்துள்ளார்கள்.