Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ரவை, பால் இருக்கா…10 நிமிடத்துல்ல இந்த ரெசிபி செய்யலாம்…!!

ரவை பர்பி செய்ய தேவையான பொருள்கள்:

வறுத்து பொடித்த ரவை     -100 கிராம்
நெய்                                               -100 கிராம்
ஏலக்காய்                                    – சிறிதளவு
சீனி                                                – 400 கிராம்
பால்                                               -800 மி.லி                                                                                                                        முந்திரி பருப்பு                         – சிறிதளவு

செய்முறை:

முதலில், பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ரவையை நன்கு வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி முந்திரி பருப்பு, ஏலக்காயை சேர்த்து நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து  சிறிது தண்ணீர் ஊற்றி, வறுத்த ரவை, வறுத்து வைத்த ஏலக்காய், முந்திரிப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மைசூர் பாகு பதத்தில் கிளறி இறக்கி கொள்ளவும்.

நெய் தடவிய தட்டை எடுத்து அதில் கிளறி இறக்கி வைத்திறுக்கும் கலவையை ஊற்றி ஒன்று போல் பரப்பி சதுரமாக வெட்டி அதன் மேல் முந்திரிப்பருப்பை தூவி பரிமாறினால் இனிப்பான, சுவையான ரவை பர்பி ரெடி.

Categories

Tech |