ரவா லட்டு செய்ய தேவையான பொருட்கள்
- நெய் – 2 மேசைக்கரண்டி
- முந்திரிப் பருப்பு – 1/4 கப்
- உலர்ந்த திராட்சை – 1/4 கப்
- ரவை – 1 கப்
- சர்க்கரை – 1 கப்
- துருவிய தேங்காய் – 1/2 கப்
- ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி
- பால் – 1/4 கப்
செய்முறை
ஒரு கடாயில் 2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும். நெய் சூடானதும் முந்திரிப்பருப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனை பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் உலர்ந்த திராட்சை சேர்த்துக் கொள்ள வேண்டும். திராட்சை உப்பி வந்ததும் துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேங்காயின் ஈரப்பதம் போகும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் ரவை சேர்த்து மிதமான சூட்டில் 5 – 6 நிமிடங்களுக்கு வறுக்க வேண்டும்.
நன்கு வறுத்த பின்னர் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். 2 – 3 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வைத்து கலந்து கொள்ள வேண்டும். கலந்த பின்னர் ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும். அதனுடன் வெதுவெதுப்பான பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் சேர்த்து கலந்த பிறகு அடுப்பை அணைத்து 5 நிமிடங்களுக்கு ஆற வைக்கவும். அதன்பின் கைகளில் நெய் தடவி விட்டு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான ரவா லட்டு தயார்.