இந்திய அணி பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து அணி வீரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது .
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் ஆகிய அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.இதனால் தலைமை பயிற்சியாளரன ரவி சாஸ்திரி, ஸ்ரீதர் மற்றும் பரத் அருண் ஆகியோர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் . இதன் பின்னர் நடத்தப்படும் பரிசோதனையில் 2 முறை கொரோனா தொற்று இல்லை என்பதற்கான நெகட்டிவ் ‘முடிவு வந்தால் மட்டுமே இந்திய அணியுடன் இணைய முடியும் .இதனால் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மான்செஸ்டரில் நடக்க உள்ள 5-வது டெஸ்ட் போட்டியில் அவர்கள் கலந்துகொள்ள முடியாது.