குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்திலுள்ள பல இடங்களில் கொலை, கொள்ளை, கடத்தல், மது கடத்தி விற்பனை செய்தல், வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ரவுடிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு நடைபெறும் குற்ற செயல்கள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு அபினவ்வுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவுப்படி காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி காவல்துறையினர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் பட்டியலை வரிசையாக கணக்கெடுத்து உள்ளனர். அதன்படி குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு போலீஸ் சூப்பிரண்ட் அபினவ் உத்தரவிட்டுள்ளார்.