சென்னையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனமானது தனது சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவைகளை ஆரம்பித்துள்ளது.
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் கொரோனா ஊரடங்கு நிலையை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு உதவும் முயற்சியில் ஈடுபட்டு தற்போது சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையினை அறிமுகப்படுத்திருக்கிறது. இச்சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் அனைவரும் அவரவர் வீட்டிலையே வாகனங்களை சர்வீஸ் செய்து கொள்ளலாம். இத்தகைய சேவையை ஆரம்பித்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், தற்போது சென்னையில் ஆரம்பமாகியுள்ளது.
மேலும் சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையில் இருசக்க வாகனங்களில் ஸ்டான்டர்டு மேலும் பெரும்பாலான வாகன சிக்கல்களை வீட்டிலையே சரி செய்து தருவதற்கான சேவையை ராயல் என்ஃபீல்டு 350 ட்ரையல் மாடல்கள் டூல்ஸ், ஸ்பேர் போன்ற இதர உபகரணங்கள் அனைத்தையும் எடுத்து செல்லக்கூடிய வகையில் ஆல்டர் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய ஆல்டர் செய்யப்பட்ட விசேஷ சர்வீஸ் மோட்டார் சைக்கிள் ராயல் என்ஃபீல்ட் சர்வீஸ் மையங்களில் கிடைக்கப் பெறுகிறது.
இதன் மூலம் சமூக இடைவெளியை பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல் சர்வீஸ் மையங்களில் வாடிக்கையாளர்கள் கூடுவதை தவிர்க்க இயலும். இத்தகைய சேவையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் சிறந்த வல்லுநர்கள் வாடிக்கையாளரின் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்பட்டு மோட்டார் சைக்கிளை சரி பார்க்கப்படுகிறது. இந்த சேவைக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.