ரயில் என்ஜினில் திடீரென பாம்பு புகுந்ததால் டிரைவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கேரள மாநிலத்திலிருந்து ஈரோட்டுக்கு சரக்கு ரயில் ஒன்று வந்தது. அந்த ரயில் என்ஜினின் முன் பகுதியில் ஒரு பாம்பு நுழைந்தது. இதனை பார்த்ததும் பதறிய என்ஜின் டிரைவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதனையடுத்து தீயணைப்பு படைவீரர்கள் என்ஜின் பகுதி மற்றும் தண்டவாளத்தில் அந்த பாம்பை தேடினர். ஆனால் அந்த பாம்பு எங்கு சென்றது என்று தெரியவில்லை. இதனால் பாம்பை தேடும் பணியை கைவிட்டு தீயணைப்பு படைவீரர்கள் அங்கிருந்து சென்றனர். இதனிடையில் ரயில் என்ஜினில் புகுந்த பாம்பை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.