Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அய்யோ பாவம்…. ரயில் எஞ்சினில் சிக்கிய மயில்…. பின் நடந்த சம்பவம்….!!

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் பெண் மயில் ஒன்று சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 2-வது பிளாட்பாரத்தில் கோவையில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட ரயில்வே காவல்துறையினர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் பெண் மயில் ஒன்று அடிபட்டு இறந்து சிக்கியிருந்ததை பார்த்துள்ளனர்.

அதன்பின் காவல்துறையினர் விரைந்து சென்று இறந்த பெண் மயிலை மீட்டு ரயில்வே காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி வனத்துறையினர் விரைந்து வந்து இறந்த பெண் மயிலை கைப்பற்றி குழி தோண்டி புதைத்தனர்.

Categories

Tech |