Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மதுபோதையில்…” தண்டவாளத்தை கடக்க முயன்ற இருவர்”… பின்னர் ஏற்பட்ட கொடூர சம்பவம்..!!

மதுபோதையில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு ஆண் சடலம் உடல் சிதறி கிடந்துள்ளது. இது குறித்து ரயில்வே  காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த  ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பூமாலைப்பட்டியை சேர்ந்த ஜேம்ஸ்(20) மற்றும் அண்ணாநகரை சேர்ந்த சந்தோஷ்(18) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் மது அருந்திவிட்டு அப்பகுதியில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவர்கள் மீது அந்த வழியாக வந்த ரயில் மோதி இருவரும் இறந்திருக்கலாம் என்று அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர் . மேலும் இந்த தகவலை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |