காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ரயில் நிலையம் உள்பட பல பகுதிகளில் திடீர் ஆய்வு செய்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி உள்பட பல பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கஞ்சாவை மர்மநபர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து ரயிலின் மூலமாகக் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் ரயில் நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆய்வு செய்துள்ளார்.
அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையம் முன்பாக ரயில்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் கல்லூரி மாணவிகள் முதல் பெண்கள், இளைஞர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்படுவது தடுக்கும் வகையிலும் மர்மநபர்கள் மூலமாக இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதைத் தீவிர கண்காணிப்பை ஈடுபடுத்தி குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதனையடுத்து ஜோலார்பேட்டை மினி விளையாட்டு அரங்கம் பகுதிக்கு எஸ்.பி நடைபயணமாக ஆய்வு செய்துள்ளார்.