Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரயில் எஞ்ஜினில் ஏற்பட்ட பழுது…. 1 மணி நேரம் தாமதம் ஆயிட்டு…. பயணிகள் கடும் அவதி….!!

ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுதால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழையில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரயில் நிலையத்திற்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வழியாக ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் இரண்டாவது பிளாட்பாரத்தில் மாலை வேளையில் வந்து நின்று பின்பு புறப்பட்டபோது ரயில் என்ஜின் இயங்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ரயில் என்ஜின் டிரைவர் ஜோலார்பேட்டை ரயில்வே  நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி ரயில்வே அதிகாரிகள் ஊழியர்களை வரச்சொல்லி 1 மணி நேரம் போராடியும் என்ஜினில்  இருக்கும் பழுதை அவர்களால் சரி செய்ய முடியவில்லை. எனவே ரயில்வே அதிகாரிகள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து வேறு என்ஜின் வரவைத்து பொருத்தி அதன் பிறகு ரயில் 1 மணி நேரம் பிறகு சென்னை நோக்கி புறப்பட்டுள்ளது. இவ்வாறு தாமதமாக புறப்பட்டதால் ரயிலில் இருக்கக்கூடிய பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Categories

Tech |