ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு உரிய கட்டணம் சலுகையை மீண்டும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை பெறப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மூத்த குடிமக்களுக்கு உரிய பயணக் கட்டண சலுகைகளும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ரயில் சேவைகள் பழைய நிலைமைக்கு திரும்பிய நிலையில் தங்களுக்குரிய கட்டண சலுகைகள் மட்டும் மீண்டும் வழங்கப்படவில்லை என மூத்த குடிமக்கள் புகார் கூறுகின்றனர். இதில் வயது முதியோருக்கு ரயில் பயணமானது வசதியாக இருக்கும்போது கட்டண சலுகை அவசியமானது என்று மூத்த குடிமக்கள் சங்கங்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக ரயில்வே துறைக்கு கோரிக்கை கடிதம் எழுதப்பட்டு இருப்பதாகவும் மூத்த குடிமக்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையில் மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டண சலுகையை வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக மூத்த குடிமக்களில் ஆண்களுக்கு 40 சதவிகிதம் மற்றும் பெண்களுக்கு 50 சதவிகிதம் பயணக் கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.