Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரயிலில் பயணித்த கல்லூரி பேராசிரியை…. சில்மிஷத்தில் ஈடுபட்ட அதிகாரி…. போலீஸ் நடவடிக்கை…!!

கல்லூரி ஆசிரியையிடம் சில்மிஷம் செய்த குற்றத்திற்காக விமானப்படை அவில்தாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

பெங்களூரில் வசித்து வரும் கல்லூரி பேராசிரியை ஒருவர், தசரா விடுமுறைக்காக,  கேரள மாநிலத்திலுள்ள கோட்டத்திற்கு கோவை வழியாக செல்லும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விமானப்படை அவில்தாரான பிரப்ஜோட் சிங் என்பவர் பேராசிரியைக்கு எதிரே உள்ள இருக்கையில் பயணம் செய்து வந்துள்ளார். அப்போது பிரப்ஜோட் சிங் பேராசிரியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட தொடங்கியுள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் ரயிலில் பயணித்த மற்ற பயணிகள் உறங்கிக் கொண்டிருந்தனர்.

ஆனால் பிரதாப் சிங் மட்டும் உறங்காமல் கல்லூரி பேராசிரியையிடம் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பலமுறை கல்லூரி பேராசிரியை அவரை எச்சரித்தும் அவர் அதனை பொருட்படுத்தவில்லை. இந்த ரயில் ஈரோடுக்கு வந்த பிறகு கல்லூரி பேராசிரியை அங்குள்ள காவல்நிலையத்தில் சென்று நடந்ததைக் கூறி பிரப்ஜோட் சிங் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் ஈரோடு ரயில்வே காவல்துறையினர் கல்லூரி பேராசிரியை பயணித்த முன்பதிவு பெட்டிக்கு சென்று பிரப்ஜோட் சிங்கை காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து விமானப்படை அதிகாரியான பிரப்ஜோட் சிங் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். அதன்பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Categories

Tech |