Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரயில் கடத்த முயற்சி…. வசமா சிக்கிய 3 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

ரயிலில் கடத்த முயன்ற கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு சென்னையிலிருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயிலில் கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சென்னை-மங்களூர் விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தீப்ரத் சத்பதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்புச்செழியன் மற்றும் காவல்துறையினர் ரயில் பெட்டிகளில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெட்டியில் பயணித்த 3 பேரின் பைகளில் 8 கிலோ கஞ்சா இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் 3 பேரையும் பிடித்து போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் குற்றபுலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத்தொடர்ந்து 3 பேரிடமும் போதை பொருள் நுண்ணறிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் விசாரணை நடத்தியபோது அவர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஷாஜகான், முகமது அனீஷ்ஷமி, முபாரக் என்பதும், இவர்கள் சென்னையிலிருந்து கஞ்சா வாங்கி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 1 லட்சம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து 3 பேரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |