கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த தொழிலாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த 16 தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பின் தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு பாங்கிஷாப் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்போது ஆம்பூர் நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன், ஆம்பூர் நகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கர் மற்றும் ரயில்வே அலுவலர்கள் பலர் அங்கு இருந்தனர்.