ஹரியானாவில் பெண்ணொருவர் ரயிலுக்கு அடியில் படுத்துக்கொண்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது .
ஹரியானா மாநிலத்தின் ரோதத் நகரை சேர்ந்த பெண்ணொருவர் சிக்னலுக்காக ரயில் நின்று கொண்டிருக்கும் போது ரயிலின் அடியில் புகுந்து தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். ரயில் திடீரென புறப்பட தொடங்கியது உடனே அந்த பெண் ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் நகராமல் படுத்துக்கொண்டார்.
#WATCH | A woman saved her life by lying down on a railway track in Haryana's Rohtak after she got trapped beneath a moving train. The train was earlier on standby, awaiting a signal. She allegedly tried to cross it by going under when the train began to move suddenly (17.02) pic.twitter.com/kkuY1jtihm
— ANI (@ANI) February 18, 2021
ரயில் கடந்து சென்ற பின்பு உடனே அங்கிருந்தவர்கள் தண்டவாளத்தில் இருந்த அப்பெண்ணை மீட்டு அனுப்பிவைத்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. மேலும் அந்த பெண்ணின் செயலை குறித்து விமர்சித்து வருகின்றனர்