ரயில்வேகேட் அடைக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ரயில்வே நிலையத்திற்கு காலிப்பெட்டிகளுடன் சரக்கு ரயில் வந்தது. இதனால் காலை 9.05 மணி அளவில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டு ரயில் பெட்டிகள் பிரித்து நிறுத்தும் பணியானது ஆரம்பித்தது. இதனையடுத்து காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்த நிலையில் பயணிகள் இறங்கியவுடன் அது புறப்பட்டது. இதனிடையில் சரக்கு ரயிலில் பணி முடிவடைந்தவுடன் மீண்டும் கேட் திறக்கப்பட்டது.
அதன்பின் பேருந்து உள்ளிட்ட நெடுஞ்சாலை வாகனங்கள் புறப்பட்டு சென்றது. இவ்வாறு ரயில்வேகேட் அடைக்கப்பட்டதால் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ரயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் போக்கி மாற்று வழித் திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.