Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ரயில்வே நிலையம்” எல்லாம் சரியா நடைபெறுதா…. கோட்ட மேலாளரின் ஆய்வு….!!

ரயில்வே நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில் நிலையத்தில் விரிவாக்கம் மற்றும் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் முகுந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் நடைமேடை, இருக்கைகள், பயணிகள் ஓய்வு அறை, பாதுகாப்பு அறை போன்றவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் இடம், தட்கல் டிக்கெட் எடுக்கும் இடம் போன்றவற்றையும் பார்வையிட்டு கேட்டறிந்துள்ளார். இதேபோன்று கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கும் கோட்ட மேலாளர் முகுந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திரகுமார் அவருடன் இருந்தார்.

Categories

Tech |