Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரயில்வே தொழிலாளர்களின் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பணிமனையில் மத்திய அரசின் தனியார்மயக் கொள்கையை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. சார்பாக ரயில்வே தொழிலாளர்கள் பெருபாலானோர் மத்திய அரசை கண்டித்து ஒற்றுமை தினமாக இடைவேளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்டன போராட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யூ. யூனியன் துணைத்தலைவர் நரசிம்மராவ் தலைமை தாங்கினார். மேலும் உதவி கோட்ட செயலாளர் மோகன், ஜெகன் போன்றோர் முன்னிலையில் ரயில்வே யூனியன் சங்க நிர்வாகிகள் பெரும்பாலானோர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசின் தனியார் மயக்கொள்கையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே உற்பத்தி, பராமரிப்பு பணிகளை தனியார் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்ககூடாது என்றும் ரயில்வே ஸ்டேடியம், ரயில்வே குடியிருப்புகள், ரயில்வே நிலையம், பணிமனை வளாகங்களை (ஆர்.எல்.டி.ஏ) மூலமாக விற்கக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 41 பாதுகாப்பு உற்பத்தி பணிமனைகளை  கார்ப்பரேஷன்களாக மாற்றி 76 ஆயிரம் மத்திய அரசு பாதுகாப்புதுறை ஊழியர்களின் நிரந்தர வேலையை பறிக்க கூடாது என்றும் அவசரக்கூட்டம் மூலம் பாதுகாப்புதுறை ஊழியர்களின் வேலை நிறுத்த உரிமையை பறிக்க கூடாது என்றும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் 130-க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |