Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை தப்பிச்சுட்டு…. சேதமடைந்த ரயில்வே கேட்…. போலீஸ் நடவடிக்கை….!!

வேகமாக லாரியை ஓடிவந்து டிரைவரை காவல்துறையினர்  கைது செய்துள்னர் .

ராமேசுவரத்திலிருந்து புவனேஸ்வருக்கு ஒவ்வொரு வாரமும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி,, தஞ்சை, கும்பகோணம் வழிபாதையாக சென்னை சென்று அங்கிருந்து புவனேஸ்வர் செல்கிறது. இந்நிலையில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்ட புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையம் அருகில் வந்தது. இதனால் ரயில்வே கேட்டை பணியாளர்கள் மூட முயற்சி செய்தனர். அப்போது தஞ்சை மாவட்டம் வல்லத்தில் இருந்து பட்டீஸ்வரம் நோக்கி செம்மன் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி, முதல் பக்க ரயில்வே கேட்டை தாண்டி அடுத்த பக்கத்தில் இருந்த கேட்டில் மோதியது. இதன் காரணமாக  ரயில்வே கேட் சேதமடைந்து காணப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் லாரியை அங்கு நிறுத்தினார். இச்சம்பவம் நடந்து சிறிது நேரத்தில் ரயில்வே கேட்டை புவனேஸ்வரர் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்றது. எனவே ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்று இருந்தால் புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கி இருக்கும். இதுகுறித்து தகவலறிந்த தஞ்சாவூர் ரயில் நிலைய இளநிலை பொறியாளர், கும்பகோணம் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி பாதுகாப்பு படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயில்வே கேட் மீது மோதிய லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர் பெரமையனை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின் ரயில்வே பணியாளர்கள் சேதமடைந்த கேட்டை சீர் செய்துள்ளனர்.

Categories

Tech |