Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருட்டு போவதாக புகார்…. ரயில்வே ஊழியர் தகராறு…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சமீபகாலங்களில் ரயில்வே உதிரிபாகங்கள் திருட்டு போவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வருகின்றது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திரகுமார் தலைமையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உதிரிபாகங்கள் திருட்டு போனது குறித்து ரயில் நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது எக்ஸ்பிரஸ் ரயிலில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள லட்சுமி புரத்தை சேர்ந்த பேச்சிமுத்து மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியை சேர்ந்த சண்முகராஜா ஆகியோர் பணியில் இருக்கும் போது மது போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து காவல்துறையினர் ரயில்வே ஊழியர்கள் 2 பேரையும் கண்டித்த போது இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் பணியின் போது மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட பேச்சிமுத்து, சண்முகராஜா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |