Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB இந்த முறையாவது வெல்லுமா….? முன்பை விட அதிக பலம்….. விராட் கோலி தான் EXAMPLE….. ABD கருத்து…..!!

இந்த முறையாவது ஐபிஎல்லில் ஆர்சிபி வெல்லுமா என்ற கேள்வியை  ஏபி டிவில்லியர்ஸ் பதிவிட்ட கருத்தின் மூலம் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். 

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில்  தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால், ஐபிஎல் 2020 சீசனுக்கான போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இதற்காக விளையாட்டு வீரர்கள் அனைவரும் தீவிரமாக தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். அதன்படி, அனைவருக்கும் பிடித்த RCB  அணியானது, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அது குறித்த சில வீடியோ காட்சிகளையும் நாம் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கண்டு வருகிறோம்.

இந்நிலையில் விராட் கோலி ஆர்சிபி அணியை முன்னின்று வழி நடத்தி ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். கேப்டன் முன்னின்று வழி நடத்திச் செல்வது அணியின் மற்ற வீரர்கள் அதைப் பின்பற்றுவது என்பது மிகவும் கடினம் என அவ்வணியின் முன்னணி வீரர் AB டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணி வீரர்களுடன் இருப்பதை முன்பை விட சிறந்ததாக உணர்கிறேன்.

இந்த சூழ்நிலையில் அனைத்து வீரர்களும் நெறிமுறைகளை பின்பற்றி கடினமாக உழைத்து வருகிறார்கள்  என்றார். இவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரவ இம்முறையாவது ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Categories

Tech |