Categories
விளையாட்டு

RCB கேப்டன் நியமனம் : கோலியிடம் கெஞ்சும் அணி நிர்வாகம்…!! இந்த திடீர் டுவிசிட்க்காண காரணம் என்ன…???

விராட் கோலி ஆர்சிபி அணி கேப்டன் மற்றும் இந்திய கேப்டன் ஆகிய பதவிகளில் இருந்து விலகி பேட்டிங்கில் கவனம் செலுத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஆர்சிபி புது கேப்டனை நியமிக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டது. இதனால் புது கேப்டனாக யாரை நியமிப்பது என்பது குறித்து ஆர்சிபி தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. அதில் தினேஷ் கார்த்திக், டூ பிளெஸ்ஸி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில் மேக்ஸ்வெல் தன்னுடைய திருமணம் மார்ச் மாத இறுதியில் நடக்கும் என்பதால் தன்னால் அணியில் சரியாக விளையாட முடியாது என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். இதனை கருத்தில்கொண்டு ஆர்சிபி சிறந்த பேட்ஸ்மேனாக டூ பிளஸியை நியமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென விராட் கோலி கொடுத்த பதவி விலகல் கடிதத்தை ஆர்சிபி இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், இதன்மூலம் விராட் கோலி கேப்டனாக தொடர வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.

Categories

Tech |