Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆர்சிபி அணியில் ரிச்சர்ட்சனுக்குப் பதில்… நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் இணைந்தார் …!!!

ஆர்சிபி அணியில் இருந்து விலகிய கேன் ரிச்சர்ட்சனுக்குப் பதில் ,ஸ்காட் குகெலெஜின் புதிய வீரராக  அணியில் இணைந்துள்ளார் .

இந்தியாவில் கொரோனா  தொற்று வேகமெடுத்து வரும் நிலையில், மே 15ம் தேதி வரை இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்குபெற்று  உள்ள ,ஆஸ்திரேலியா வீரர்களான ஆண்ட்ரூ டை, ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன்ஆகியோர் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்பினர் . ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்த ஆடம் ஜம்போ மற்றும் கேன் ரிச்சர்ட்சன் இருவரும் சொந்த காரணத்திற்காக நாடு திரும்புவதாக தெரிவித்தனர்.

இதனால்  நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்காட் குகெலெஜின்,  ரிச்சர்ட்சனுக்கு பதிலாக ஆர்சிபி அணியில் மாற்று வீரராக இடம்பிடித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் நெட் பவுலராக  உள்ள குகெலெஜின் பயோ பபுள் வளையத்திற்குள் இருப்பதால், அவரை ஆர்சிபி அணி தேர்ந்தெடுத்துள்ளது. அவர்  ஆர்சிபி அணியின் இணைவதற்கு முன்பாக,  கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நெகட்டிவ் முடிவு வந்ததாக  , ஆர்சிபி அணி தெரிவித்தது  .

Categories

Tech |