இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காகவே விளையாட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் .
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக யுஸ்வேந்திர சாஹல் விளையாடி வருகிறார். இவர் நேற்று அளித்த பேட்டியில் கூறும்போது,” தற்போது என்னுடைய முழு கவனமும் 19-ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் போட்டி மீது தான் இருக்கிறது .கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து முடிந்த அளவுக்கு விரைவாக மீண்டு நல்ல நிலைமைக்கு திரும்ப முயற்சி செய்கிறேன் .இலங்கை தொடரில் சிறப்பான பார்மில் இருந்தேன் .அதேபோல் ஐபிஎல் தொடரிலும் தொடருவேன் என நம்புகிறேன்.
எப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறேனோ ,அது ஆர்சிபி அணிக்காக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாகும் .அணியின் கேப்டன் விராட் கோலி வித்தியாசமானவர். அவர் எப்போதும் களத்தில் 100 சதவீத திறமையை வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பார் . இதனால் களத்தில் மெத்தனம் காட்ட வாய்ப்பே கிடையாது ” இவ்வாறு அவர் கூறினார் .