Categories
கிரிக்கெட் விளையாட்டு

எல்லா போட்டிகளிலும் ஆடப்போவதில்லை… ஏபிடி சொன்ன கருத்து… ரசிகர்கள் கவலை..!!

நான் எல்லாப் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி அளித்திருப்பதால் ஆர்சிபி ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் (செப்டம்பர் 19) துவங்க இருக்கின்றன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக இந்தியாவில் நடத்த அனுமதி கிடைக்கவில்லை.. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெறுகின்றன.. அனைத்து அணி வீரர்களும் இந்தியாவிலிருந்தும், மற்ற நாடுகளிலிருந்தும் துபாய் மற்றும் அபுதாபி வந்தடைந்து, தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இத்தனை ஆண்டுகளாக ரசிகர்களின் ஆதரவு பெற்ற அணியாக இருந்து வரும் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை இதுவரை வென்றதில்லை.. இதனால் ரசிகர்கள் மத்தியிலும், அணி வீரர்கள் மத்தியிலும் வருத்தம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தீவிர பயிற்சி செய்து கோப்பையை வெல்லும் முனைப்பில் கோலி தலைமையிலான பெங்களூரு அணி தயாராக இருக்கிறது.

ஐக்கிய அரபு நாடுகளின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற வகையில் ஒரு பேலன்ஸ் அணியை பெங்களூரு அணி நிர்வாகமும், அந்த அணியின் கேப்டன் விராட் கோலியும் தேர்வு செய்திருப்பதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் அணியின் சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்வது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ஏ.பி டி வில்லியர்ஸ்..

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தமட்டில் இதுதான் ஒரு சிறந்த 11 வீரர்கள் அடங்கிய அணி என்று எப்போதும் குறிப்பிட்டு சொல்லி விட முடியாது.. ஒவ்வொரு ஸ்டேடியம் மற்றும் எதிரணியை பொருத்து இது மாறிக்கொண்டு தான் இருக்கும்.. அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் கோலி இருவரும் சிறந்த வீரர்களை தேர்வு செய்வதில் தலையிடுவார்கள்.. மற்ற வீரர்களுக்கு அது பற்றிய கவலை தேவையில்லை.. அணியின் முன்னணி வீரர்களாக இருக்கும் நான், பார்த்தீவ் பட்டேல் மற்றும் டேல் ஸ்டேய்ன் ஆகியோர் அனைத்து போட்டிகளிலுமே களமிறங்கி விளையாடுவோம் என்பதில் உறுதி இல்லை.

மைதானத்திற்கு ஏற்ப எந்த வீரர் தேவையோ? அவர்களை விராட் கோலி தேர்வு செய்வார். நான் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.” எனத்  தெரிவித்துள்ளார். இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது..

Categories

Tech |