ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது கொரோனோ அச்சம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஒருபுறம் வேதனை அடைந்து இருக்கும் சமயத்தில், ஐபிஎல் குறித்த அப்டேட்கள் அவ்வபோது வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் கடந்த ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் புரிந்த சாதனை குறித்தும், அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன்படி,
தற்போது இதுவரை ஐபிஎல்லில் அதிக சிக்சர் அடித்த அணி பட்டியல் வெளியாகியுள்ளது.அதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலிடத்தை பெற்றுள்ளது. ஆர்சிபி அணியானது இதுவரை 1,135 சிக்ஸர்களை அடித்து முதலிடம் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது அது இதுவரை 1095 சிக்ஸர்கள் அடித்துள்ளது. இதைத்தொடர்ந்து பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 975 சிக்ஸர்கள் அடித்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.