இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி, தமிழக வீரரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இந்த சீசன் ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது . 7 போட்டிகளில் விளையாடிய ஆர்சிபி அணி, 5 போட்டிகளில் வெற்றி பெற்று தரவரிசையில் 3 வது இடத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, இந்த சீசனில் ஹர்ஷல் பட்டேல், கெயில் ஜேமிசன் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் பவுலிங்கில் சிறப்பாக விளையாடினர் . இந்நிலையில் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறும்போது, இதுவரை நடந்த போட்டிகளில் ஆர்சிபி அணி, ஒரு நல்ல பந்துவீச்சாளராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை, என்று கூறினார் . அவருக்கு நிறைய ஓவர்களை கொடுத்திருந்தால் சிறப்பாக விளையாடி இருப்பார். 6 போட்டிகளில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் 31 ரன்கள் மற்றும் பவுலிங்கில் 3 விக்கெட்டுகளை மட்டும் எடுத்துள்ளார்.
ஆனால் மற்றொரு வீரரான யுவேந்திர சஹால் , 7 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார் அதோடு அதிக ரன்களை கொடுத்த வீரராகவும் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆர்சிபி அணி பேட்டிங்கிலும் குறை உள்ளது. அணியின் டாப் ஆர்டரில் , விராட் கோலி ,படிக்கல் ,மேக்ஸ்வெல் , டிவில்லியர்ஸ் ஆகியோர் விளையாடுகின்றனர் ஆனால் 6 வது இடத்தில் விளையாடுவதற்கு சரியான வீரர் அணியில் இல்லை. இதன்காரணமாக டாப் ஆர்டரில் பேட்ஸ்மேன்களுக்கு அதிக பிரஷர் காணப்படுகிறது. என்று கூறினார். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு ப்ளேயிங் லெவனில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது.