இந்த சீசனில் நடைபெற்ற ஐபில் போட்டிகளில் ,ஆர்சிபி அணி தொடர்ந்து வெற்றியை சந்தித்து வருகிறது .
2021ம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி ,சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளிலும் விளையாடிய ஆர்சிபி அணி, வெற்றி பெற்றுள்ளது. அதோடு தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றியது. குறிப்பாக ஆர்சிபி அணியில் விராட் கோலி ,டிவில்லியர்ஸை அடுத்து, தற்போது மேக்ஸ்வெல் ,தேவ்தத் படிக்கல் ஆகிய வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அதோடு பவுலிங்கில் ஜேமிசன், ஹர்ஷல் முகமது சிராஜ் ஆகியோர் சிறப்பாக விளையாடுகின்றன.
எனவே ஆர்சிபி அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்து விளங்குகிறது. இதனால் ஆர்சிபி அணியின் ரசிகர்கள், இந்த வருடத்தில் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி, கைப்பற்றிவிடும் என்ற ஆர்வத்தோடு உள்ளன. இதுபற்றி கேப்டன் விராட் கோலியிடம் நேற்று நடைபெற்ற போட்டியின்போது கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விராட் கோலி கூறும்போது, ஆர்சிபி ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்போடு இருக்க வேண்டாம் ,என்றும் கூறினார். நாங்கள் போட்டியின்போது ஒரு போட்டியை குறித்துதான் கருத்தில் கொண்டு விளையாடுவோம் என்றார். இந்த சீசன் சிறந்த தொடக்கமாக உள்ளதாகவும் ,இதற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது என்று கூறினார்.