கொல்கத்தா அணி வெற்றி பெற 205 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த ஆர்சிபி .
14வது ஐ.பி.எல் தொடரின் ,10 வது லீக் போட்டியில் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .ஏ சிதம்பரம் மைதானத்தில், நடக்கிறது .இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது . முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஆர்சிபி அணி ,இறுதியாக 20 ஓவர் முடிவில் ,4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை குவித்தது .குறிப்பாக வில்லியர்ஸ் ,மெக்ஸ்வெல் இருவரும் அதிரடியாக விளையாடினர் .
தற்போது 205 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு கொல்கத்தா அணி விளையாடுகிறது .தொடக்க வீரர்களாக நிதிஷ் ராணா -சுப்மன் கில் களமிறங்கினர் .இதில் 2 பவுண்டரி ,2 சிக்ஸர்களை அடித்து 21 ரன்னில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார் .அடுத்து இறங்கிய ராகுல் திரிபாதி 5 பவுண்டரிகளை அடித்து ,25 ரன்னில் வெளியேறினார் .இதன் பிறகு ராணா 2 பவுண்டரி ,1 சிக்ஸர் அடித்து 18 ரன்களில் அவுட் ஆனார் . அடுத்து மோர்கன் ,தினேஷ் கார்த்திக் விளையாடினர் .
இதில் தினேஷ் கார்த்திக் 5 பந்துகளில் ,2 ரன்கள் எடுத்து வெளியேறினார் .எனவே கொல்கத்தா அணி 8.4 ஓவர் முடிவில் , 4 விக்கெட்டை இழந்து 74 ரன்களை குவித்தது . அணியின் கேப்டனான மோர்கன் 2சிக்ஸர் ,1 பவுண்டரி அடித்து 29 ரன்களில் ஆட்டமிழந்தார் . இதனால் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது . கொல்கத்தா 15 ஓவரில் 121 ரன்களை குவித்துள்ளது .